திருகோணமலை- தோப்பூர், உப்பூறல் பகுதியில், இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழ், முஸ்லிம் குழுக்களுக்கிடையில், இன்று காலை 10 மணியளவில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் காயமடைந்தவர்களி்ல் நால்வர் சேருநுவர வைத்தியசாலையிலும் இருவர் மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணியை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கைகலப்பாக மாறியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீது நஜிமுதீன் (57)நஜிமுதீன் இர்சாத் (20) நூறு முஹம்மது குபைபுல்லாஹ்(45) ஏ.எம்.சிராஜிதீன் (58) ஆகியோரும், உப்பூறல் பகுதியைச் சேர்ந்த நாகராசா (40) மற்றும் ந.சிவசோதி (45) ஆகியோருமே காயமடைந்துள்ளதாக தெரிவித்த சேருநுவர பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

No comments:
Post a Comment