முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதற்கு, அரசாங்கம் எடுத்த முடிவு சரியானதே என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்தவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பயிற்சிகளை முறையாகப் பெற்றவர்களல்ல.
தமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களே அவர்கள்.முறையான வழிமுறைகளின் ஊடாக இவர்கள் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மகிந்த ராஜபக்ச, ஜனாபதியாக இருந்த காலகட்டத்தில் அவரது உத்தரவின் பேரில் தான் இவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. நான் இராணுவத் தளபதியாக இருந்த போது, இரண்டு சார்ஜன்ட்கள் இவ்வாறுதான் மேஜர் மற்றும் அதற்கு மேலான தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டனர்.
இவர்கள், இராணுவத்தில் இருந்து கொண்டே, மேலதிகாரிகளை மதிப்பதில்லை. ஒழுக்கநெறிமுறைகளை மீறி, பெருமளவு பணத்தை குவித்து வைத்திருக்கின்றனர். நான் இராணுவத் தளபதியாக இருந்த போது, எனக்கு 80 ஆயிரம் ரூபா ஊதியம் பெற்றேன். ஆனால், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பப் பிரிவில் இருந்த இவர்கள் மாதம், இரண்டு மில்லியன் ரூபா வரை சம்பாதித்தனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment