July 17, 2016

வவுனியாவில் கூட்டமைப்பின் கலந்துரையாடல்!

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
இந்தவிடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி செல்வரட்ணம் மற்றும் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்துரையாடல் நடத்தினார்.

 
இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment