65 வருடகாலமாக தமது உரிமைகளுக்காக போராடி வரும், சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்தி வரும் தமிழ் மக்கள் மத்தியில், ஒற்றையாட்சி தீர்வை ஏற்றுக்கொள்வதற்கான மனோநிலையை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே, மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்கவின் கருத்துக்கள் அமைவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்கள் சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர்கள் ஒற்றையாட்சிக்குள் வாழ்வதற்கு விரும்புவதாகவும், புதிய அரசியல்யாப்பு தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க நேற்று தெரிவித்திருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-
இது எதிர்பார்த்திருந்த ஒரு விடயம் தான். கடந்த 2010ஆம் ஆண்டு ஒற்றையாட்சி முறையிலான தீர்விற்கு சர்வதேசம் வலியுறுத்தியதன் காரணமாகவே நாம், கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம். அதுமாத்திரமன்றி லால் விஜேநாயக்க, இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவுடன், ஒற்றையாட்சி முறையிலேயே தீர்வு சாத்தியம் என்றும், ஒற்றையாட்சிக்கு அப்பால் தீர்வினைத் தேடுபவர்கள் தீவிரவாதிகள் என்றும் கூறியிருந்தார். தற்போதைய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினாலும், வெறுமனே ஆள் மாற்றமே ஏற்பட்டுள்ளது. இவர்கள் முன்னதாகவே தீர்மானித்த ஒற்றையாட்சி என்ற நிகழ்ச்சி நிரலுக்கு, தமிழ் மக்களை படிப்படியாக தயார்படுத்தும் ஒரு வேலைத்திட்டத்தினை மேற்கொள்கின்றனர் என்றும் குற்றம் சுமத்தினார்.

No comments:
Post a Comment