July 18, 2015

அரச பணியாளர்களிற்கு ஈபிடிபி பிரச்சாரம்! தடுத்து நிறுத்தியது தேர்தல் திணைக்களம்!

தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சி அலுவலகம் ஒன்றில் வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் சாரதிகள்இ நடத்துனர்களை கடமை நேரம்   அழைத்து தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றை நடத்த ஈபிடிபி மேற்கொண்ட முய்றசி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


கூட்டத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களின் தலையீட்டால் மேற்படிக் கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் வடபிராந்திய போக்குவரத்து சபைக்குள் இயங்கிவரும் ஜனநாயக போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கத்தினூடாகவே மேற்படி கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவ்வழைப்பிற்கு அமைய நேற்று முற்பகல் 10 மணியளவில் ஈ.பி.டி.பி தலமைச் செயலகத்தில் மேற்படி பிரசார கூட்டம் இடம்பெறுவதற்கான முன்னெடுப்புக்கள் பூர்த்தியடைந்திருந்தது.

இந்நிiலியல் தேர்தல் விதிமுறைகளை மீறி கடமைநேரத்தில் போக்குவரத்து சாலை பணியாளர்களை அழைத்து பிரசாரக் கூட்டம் கூட்டப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து இது தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு குழுவால் யாழ்.மாவட்ட உதவித் தேல்தல் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னரே குறித்த பிரசார கூட்டம் திடீரென
இடைநிறுத்தப்பட்டு அங்கு கூடியிருந்த சகல போக்குவரத்து பணியாளர்களும் அவசர அவசரமா
வெளியேற்றப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment