July 18, 2015

யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் பவானி வவுனியாவுக்கு இடமாற்றம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி பவானி பசுபதிராஜா வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு பணிப்பாளர் நியமிக்கப்படும் வரை வைத்தியசாலையில் தற்போது பிரதிப் பணிப்பாளராக உள்ள மருத்துவர் கே. நந்தகுமார் பதில்பணிப்பாளராக கடமையாற்றுவார்.

வருடாந்த இடமாற்ற அடிப்படையிலேயே இவர் வவுனியாவுக்கு மாற்றலாகிச் செல்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்த இடமாற்றம் இந்த வருட ஆரம்பத்தில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment