July 18, 2015

மகிந்த 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த , குடும்பத்தினருக்கு மட்டுமே உயிரூட்டினார்: ரணில்!

நாட்டுக்கு உயிரூட்ட மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குமாறு அனுராதபுரத்தில் எழுப்பபட்ட கோஷம் கேலிக்குபுரியது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டுக்கு உயிரூட்ட மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என கோஷம் எழுப்பியுள்ளனர். இது கேலிக்குரியது. 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த மகிந்த தனது குடும்பத்திற்கு மாத்திரமே உயிரூட்டினார்.
மகிந்த ராஜபக்சவின் அரசியல் கடவுச்சீட்டுக்கு மக்கள் தடைவிதித்துள்ளனர். நாட்டுக்கு உயிரூட்டுவதற்கு பதிலாக மகிந்தவுக்கு சேலைன் ஏற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தமது கோஷத்தை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment