July 18, 2015

கே.பி. சிறிலங்காவில் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டிலா?-சுஜீவ சேனசிங்க!

கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்த பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு அதிபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கரைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சுஜீவ சேனசிங்க பதிலளித்தார்.
அப்போது,கே.பி. இப்போது சிறிலங்காவில் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டிலா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சுஜீவ சேனசிங்க, கே.பி தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்துப் பரிந்துரைப்பதற்காக அதிபர் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்னமும் சட்டமாஅதிபருக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment