கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறில், கத்திக் குத்துக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தந்தையான ராசலிங்கம் சாந்தரூபன் (28 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிளிநொச்சி ஆதார வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment