யாழ்ப்பாணத்தின் சுதுமலைப்பகுதியில் மற்றுமொரு பெண் கொள்ளையர்களால் இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். சுதுமலை வடக்கு சுதுமலையை
சேர்ந்த 57 வயதுடைய கு.பத்மாவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் சுதுமலையை சேர்ந்த குறித்த பெண்மணி தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார்.
அப்பகுதியிலுள்ள ஆலயத்திருவிழாவிற்காக கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த நிலையில் தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். அத்துடன் இவரது வீட்டில் வேறு ஒரு பெண்மணி வாடகைக்கு குடியிருந்து வருகின்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் இவர்கள் இருவரது வாய்களையும் கைகளையும் கட்டிவிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதில் சாவடைந்த பெண்ணியின் கைப்பை , தாலிக்கொடி உள்ளிட்ட தங்கநகைகள் மற்றும் கைத்தொலைபேசி உட்பட பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. எனினும் மூச்சுதிணறல் ஏற்பட்டதால் சாவு நிகழ்ந்ததா அல்லது கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே அரியாலைப்பகுதியினில் இதே பாணியினில் வயோதிப பெண்மணியொருவர் கொள்ளையர்களினால் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment