July 5, 2015

சட்டம் பேசும் சுமந்திரனின் மிகவும் அப்பட்டமான பொய் ஆக, ஏமாற்று வித்தை அம்பலம்!

அரசமைப்புக்கு கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தம் சிறிய கட்சிகளின் பேரம் பேசும் சக்தியை பலவீனம் அடைய வைத்து உள்ளது என்று அரசியல் அவதானிகள் பலரும் அபிப்பிராயம் கூறுகின்றார்கள்.


இரு பிரதான கட்சிகளும் ஒரு மனதாக இத்திருத்தத்தை நிறைவேற்றின.

தமிழ் மக்களின் பேராதரவை உடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் மக்களின் பேராதரவை உடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் இத்திருத்தத்தை நிறைவேற்றுவதில் முன்னுக்கு நின்று பங்களிப்பு வழங்கின.

ஆனால் இத்திருத்தத்தை நிறைவேற்ற சிறுபான்மைக் கட்சிகள் மிண்டு கொடுத்தது மூலம் தமிழ் பேசும் சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட நன்மை என்ன? என்கிற கேள்வி தொக்கு நிற்கின்றது.

இக்கேள்விக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம். பியாக இருந்த எம். ஏ. சுமந்திரன் தந்து இருக்கின்ற பதில் மிகவும் அப்பட்டமான பொய் ஆக, ஏமாற்று வித்தையாகவே வெளிப்பட்டு நிற்கின்றது.

இவர் அண்மையில் மின்னல் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று விவாதித்தபோது பல்லினத் தன்மை கொண்ட நாடு என்கிற வார்த்தையை 19 ஆவது திருத்தம் மூலமாக அரசமைப்பில் இடம்பெற வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இமாலய சாதனை புரிந்து உள்ளதாக அளந்தார். இவ்வார்த்தையை இடம்பெற வைத்து அரசமைப்பில் சிறுபான்மை மக்களின் உரிமையை நிலைநாட்டவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து இருந்தனர் என்று விளாசினார்.

ஆனால் உண்மை என்னவென்றால் 19 ஆவது திருத்தத்தின் ஆங்கில மூலத்தில் பல்லினத் தன்மை கொண்ட நாடு என்கிற அர்த்தம் உடைய எந்தவொரு வார்த்தையும் கிடையவே கிடையாது.

Pluralism என்கிற சொல்தான் ஆங்கில மூலத்தில் சம்பந்தப்பட்ட வார்த்தையில் இருக்கின்றது. இச்சொல்லுக்கு உண்மையான அர்த்தம் பன்முகத் தன்மை என்பதாகும். பன்முகத் தன்மை என்கிற சொல்லுக்கும் சுமந்திரனால் வியாக்கியானம் சொல்லப்பட்ட பல்லினத் தன்மை என்கிற சொல்லுக்கும் எந்தவொரு சம்பந்தமுமே கிடையாது.

19 ஆவது திருத்தத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் திருகுதாளம் நடத்தி, அரசாங்கத்தை மாத்திரம் அன்றி ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் ஏமாற்றி, இதில் பெயரும், புகழும் அடைய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சித்திருக்கின்றமை தற்போது வெளியில் தெரிய வந்து விட்டது.

சட்டத்தரணி என்று இனி மேல் சட்டை அணிந்து திரிகின்றமைக்கு சுமந்திரன் வெட்கப்பட்டே ஆக வேண்டும்.

சுவாமிநாதன் 

No comments:

Post a Comment