நாடாளுமன்ற தேர்தலிற்கான முன்னேற்பாடுகளினில் முனைப்பு காட்டிவரும் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவளிப்பதில்லையென கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள்
தீர்மானித்துள்ளனர்.தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பினில் ஆராய கூட்டப்பட்ட கூட்டத்தினையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர்;.பதிவு இணைய செய்தி
வடமராட்சியினில் தேர்தல் களமிறங்க தீர்மானித்துள்ள சுமந்திரன் கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை நகரசபை ,பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் கரவெட்டி பிரதேசசபைகளது உறுப்பினர்களை கூட்டமொன்றிற்கு அழைத்திருந்தார்.
எனினும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டனர்.கலந்து கொண்ட பலரும் வடமராட்சியினில் மக்கள் முற்றுமுழுதாக தங்களிற்கு எதிரான மனோநிலையினில் இருப்பதாகவும் தாங்கள் போட்டியிடுவது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை வெற்றியடையவே வைக்குமெனவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.பதிவு இணைய செய்தி
குறிப்பாக கடந்த தேர்தலிலும் வடமராட்சியின் இருதொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையினில் எவரும் நாடாளுமன்றம் செல்லவில்லையெனவும் இம்முறையும் அவ்வாறான சூழலை ஏற்படுத்த வேண்டாமென கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.எனினும் இதற்கு சுமந்திரன் பதில் எதனையும் தந்திருக்கவில்லையென தொடர்புடைய தரப்புக்கள் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளன.

No comments:
Post a Comment