முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின் முடிவல்ல, அதுவே ஆரம்பம் என்பதை மே 18
தமிழின அழிப்பு நாளில் நாம் பேரெழுச்சி கொண்டு அன்று நடைபெறும் மாபெரும் பேரணியில் எடுத்துரைப்போம். இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டுள்ள தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி Düsseldorf நகரின் தலமை தொடரூந்துநிலையத்தில் இருந்து ஆரம்பித்து உள்ளூராட்சி பாராளுமன்றத்தை நோக்கி புறப்படுவோம் .சர்வதேச சமூகம் தமிழின அழிப்புக்குகான அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்த வேண்டும் எனவும் , தமிழீழ மக்கள் தமது அரசியல் விருப்பங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஐநாவின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் இதில் புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இப் பேரணியை நகரவைப்போம் .
தமிழினம் காலம் காலமாய் நசுக்கப்படுவதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருந்த போதிலும் மௌனமாக இருப்பது ஏன்? இனப்படுகொலை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கையை இலங்கையின் தற்போதுள்ள ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி தாமதித்தது நீதி மறுக்கப்பட்டதுக்கு சமனாகும் .தாயக , தமிழக , புலத்து மக்களின் அயராத போராட்டத்தின் ஊடாகவே இன்று சர்வதேசம் கண்விழித்துள்ளது . தொடர்ந்தும் போராடுவோம் . சர்வதேசம் அமைதியை கலைத்து ஒடுக்கப்படும் தமிழ் இனத்திற்கு விடிவைப் பெற்றுத்தரும்வரை போராடுவோம் . இந்த உரிமைக் கோசத்தை மே 18 திகதி ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிப்போம் சனத்திரளாய் வாருங்கள்.
அழிவுகளும் அடக்கு முறைகளும் தமிழ் இனத்திற்கு புதிதல்ல விழ விழ எழுவோம். முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின் முடிவல்ல அதுவே ஆரம்பம் என்பதை எடுத்துரைப்போம் பேரணியாய் ஓரணியில் வாருங்கள்.இப்பேரணியில் யேர்மனியில் உள்ள பொது அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், உள்ளூர் சங்கங்கள் , கோயில்கள் , பாடசாலைகள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.
கண்டனப் பேரணி
காலம் :18.05.2015
இடம் : Düsseldorf Hauptbahnhof (யேர்மனி )
நேரம் : 14:00 மணிக்கு
நினைவு வணக்க நிகழ்வு
காலம் :18.05.2015
இடம் : Platz des Landtags
Düsseldorf (யேர்மனி )
நேரம் : 16:30 மணிக்கு
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

No comments:
Post a Comment