நடிகர் சரத்குமாரின் தமிழினத் துரோகம் குறித்து ‘தமிழக அரசியல்’ வெளியீட்டாளரும் பத்திரிகையாளர் தொழிலதிபருமான திரிசக்தி சுந்தர்ராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான
நிலத்தில் கட்டடம் கட்டுவதில் சரத்குமார் அணி மேற்கொண்ட ஊழல்குறித்து 5ஆண்டுகள் கழித்து தமிழக அரசியல் இதழ் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதன்போதே சரத்குமாரின் தமிழினத் துரோகம் குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு உண்ணாவிரதமிருந்த சரத்குமார், இன்னொருபுறம் ராஜபக்சே குடும்பத்துடன் மலேசியா மூலம் வர்த்தக உறவு கொண்டிருந்ததை ‘தமிழக அரசியல்’ அம்பலப்படுத்தியது. இதுவரை அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.
2010 இல் சரத்குமாரே என்னிடம், ‘ராஜபக்சே குடும்பத்தினருடன் ராதிகாவின் தாய் மாமன் மூலமாக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இலங்கையில் பவர் ப்ளாண்ட் நீங்கள் ஏன் போடக்கூடாது? ராஜபக்சேவை நேரடியாக நீங்கள் சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன். அவர் எல்லா உதவிகளையும் செய்வார்.’ என்று என்னிடம் சொன்னார்.
அத்துடன், ‘தமிழக அரசியல் இதழில் புகழேந்தி தங்கராஜ் தொடர்ந்து எழுதிவரும் ஈழத்தமிழர் தொடர்பான கட்டுரைகளை நிறுத்திவிடுங்கள். ஈழத் தமிழர்களுக்கு ஒரு இன்ச் நிலம் கூடக்கிடைக்கப் போவதில்லை.’ என்றார். ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அதிகமான ஆர்வமும் உறுதியான கொள்கையும் கொண்டிருக்கும் எனக்கு இது தமிழினத் துரோகமாகவே பட்டது. ஆனால் அது அவரது கொள்கையும் கருத்தும் என்று விட்டு விட்டேன். இவர்தான் ஈழத் தமிழர்களுக்காக டி.வி. கேமராக்கள் முன்னால் உண்ணாவிரத நாடகமாடியவர். இவ்வாறு சரத்குமாரின் தமிழினத் துரோகம் குறித்து திரிசக்தி சுந்தர்ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்.

No comments:
Post a Comment