October 9, 2015

" சமாதானத்துக்கும் மற்றும் நல்லிணகத்துக்குமான நீண்ட பாதை " எனும் தலைப்பில் யேர்மனியில் நடைபெற்ற கருத்தரங்கு !(படங்கள் இணைப்பு)

இலங்கை தொடர்பாக " சமாதானத்துக்கும்  மற்றும் நல்லிணகத்துக்குமான நீண்ட பாதை " எனும் தலைப்பில் யேர்மனியில் நடைபெற்ற கருத்தரங்கு யேர்மன் வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இயங்கும்
அபிவிருத்தி நிறுவனத்தின் (GIZ ) ஊடாக ஒழுங்குசெய்யப்பட்டது . இவ் நிகழ்வில்  அவ் அமைப்பின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி Randa  Kourieh  Ranarivelo  கலந்துகொண்டு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அபிவிருத்தி திட்டங்கள்  விடையமாக  தனது கருத்தை பகிர்ந்துகொண்டதோடு ,இலங்கையில் நடைபெற்ற  யுத்தம் விடையமாகவும் அதால் ஏற்பட்ட  அழிவுகளையும் தனது பார்வையில் வெளிப்படுத்தி இருந்தார் .
திருமதி Randa  Kourieh  Ranarivelo அவர்கள் இலங்கையில் நடைபெற்ற போர் மிக கொடியதாக இருந்ததாகவும் அதில் இரு இன மக்களும் பல அழிவுகளை சந்தித்ததாகவும் அந்த போரின் வடுவில் இருந்து மக்களை மீட்கும் பணியில்  தாம் பல அபிவிருத்தி திட்டங்களை செய்வதாக கூறினார்.
அவர் தொடர்ந்து கூறிய கருத்தில் இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் அனைத்து மக்களும் முழுமையான மாற்றத்தை கண்டுள்ளார்கள் என்பதாகவும் தெரிவித்திருந்தார் .திருமதி Randa  Kourieh  Ranarivelo அவர்கள் தந்து உரையில் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பாக அடிப்படை காரணங்களை எடுத்துரைக்க தவறியதோடு , இன்றும் தமிழ் மக்கள் படும் அவலத்தை மூடி மறைக்கும் முகமாக சுற்றுலாத்துறைக்கு ஏற்ற  படங்களையும் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களுக்கு காட்டினார் .
திருமதி Randa  Kourieh  Ranarivelo  அவர்களின் உரையை தொடர்ந்து கேள்வி பதில் நேரத்தில் , யேர்மன் மக்கள் அதிகம் இலங்கை தொடர்பாக தமது சுற்றுலாத்துறை சார்ந்த கேள்விகளை கேட்டு கொண்டனர் . இவ் நிகழ்வில் கலந்துகொண்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதி ஒருவர் , திருமதி Randa  Kourieh  Ranarivelo அவர்கள்  இலங்கை நிலவரம் சார்ந்து  வழங்கிய  பிழையான தகவல் தொடர்பாக தனது கடும் அதிருப்தியை தெரிவித்ததோடு இலங்கையில் நடைபெற்ற/ இன்றும் நடைபெறும் திட்டமிட்ட இன அழிப்பு தொடர்பாக விளக்கத்தை கொடுத்ததோடு அண்மையில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்பிக்கப்பட்டிருந்த விசாரணை அறிக்கையினை சுட்டிக்காட்டியும் அதை நீர்த்து போக செய்த அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாகவும் தனது கருத்தை பதிவு செய்தார் . நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் 2009 ஆண்டு 146679 மேலான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர் .
நிகழ்வின் இறுதியில் தமிழர்கள் சார்பாக எடுத்துரைக்கப்பட்ட கருத்துக்கு நிகழ்வில் கலந்துகொண்ட யேர்மன் மக்கள் தமது ஆதரவை அளித்ததோடு , கருத்தரங்கை ஒழுங்கு செய்த நிறுவனமும் தமது நன்றியை தெரிவித்தனர் .இவ் நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக கலந்துகொண்ட இரு அரசியல் ஆய்வாளர்கள் தனிப்பட்ட கலந்துரையாடலில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரச அடக்குமுறை இன்றும் தீவிரமாக தொடர்ந்த வண்ணமே உள்ளது என்பதையும் அதை தாம் உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்பதையும் பதிவுசெய்தனர் .
யேர்மன் அரசாங்கம் இலங்கையுடன் தொடர்ச்சியான நல்லுறவை பேணுவதோடு , அண்மையில் யேர்மன் வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றதும் அதை தொடர்ந்து நடைபெற்ற இவ் நிகழ்வும் யேர்மன்அரசாங்கம்  இலங்கை தொடர்பாக எடுத்திருக்கும்  நிலைப்பாட்டை மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது .



No comments:

Post a Comment