March 1, 2015

முன்னாள் போராளியின் இறுதிக் கிரிகைகளுக்கு ஜேர்மன் ஊடகவியலாளர்கள் உதவும் இதயங்கள் ஊடாக உதவி வழங்கினர்!

எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற வேண்டியது எமது சமூகத்தின் கடமையாகும். ஆனால் அதனை எவ்வளவு பெயர் மனதில் முன்னிறுத்தி செயற்படுகின்றார்களென்பது கேள்விக்குறியே.

மல்லாவி பாண்டியன்குளம் பகுதியில் முள்ளந்தண்டு செயலிழந்த நிலையில் நீண்ட காலமாக படுத்தபடுக்கையாக இருந்திருந்த 35 வயதேயான முன்னாள் போராளியொருவர் அண்மையில் இயற்கை எய்திருந்தார். படுக்கை புண் முள்ளந்தண்டை தாக்கியதினால் மரணம்
சம்பவித்துள்ளது.
எனினும் இயற்கை எய்திய முன்னாள் போராளியான அவ்விளைஞரது புகழுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லக்கூட வசதியற்றதாககே அவரது குடும்ப நிலை இருந்துள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் ஜெர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து தொழிற்பட்ட
அவ்வமைப்பினர் தமது இணைப்பாளர் ச.சஜீவன் மூலம் அப்போராளியின் இறுதிக்கிரியைகள் நடைபெற வழி செய்துள்ளனர்.
காலமறிந்து செய்யப்பட்ட அவ்வுதவி உறவுகள் செத்தொழிந்து போகவில்லையென்பதை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தி நிற்கின்றது.




No comments:

Post a Comment