படைமுகாமினுள் அத்துமீறிப்பிரவேசித்ததாக தெரிவித்து மாடுகளது கழுத்தை துண்டித்து கொலை செய்ய முற்பட்ட படையினர் பற்றி
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசுவமடு பகுதியில் பண்ணையாளர் ஒருவரது மாடுகள் தவறுதலாக அருகாகவுள்ள படைமுகாமினுள் புகுந்துள்ளது. இந்நிலையில் குறித்த மாடுகள் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலை படைமுகாமிலிருந்து தப்பித்து வந்துள்ளன.
அவ்வாறு தப்பித்து வந்திருந்த மாடுகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவற்றை கொலை செய்யவென கழுத்தை வெட்டியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர் கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தமிழர்களையே கழுத்து வெட்டி கொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு மாடுகளை கழுத்து வெட்டிக்கொல்வது கடினமல்லவென அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment