விடுதலை சுடர் பயணமானது தமிழர்களின் கரிநாளான சிறிலங்காவின் சுதந்திரதினமான 04 பெப்ரவரி 2015 அன்று பிரித்தானியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயயுரிமையை
பிரதிபலித்து பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளினூடாக பயணம் செய்து 25ம் நாளான இன்று (28.02.2015) யேர்மனி முன்ஸ்டர் (Münster) நகரை வந்தடைந்தது.
இன்று காலை 10:00 மணியளவில் முன்ஸ்டர் (Münster) Marienplatz ல் விடுதலை சுடர் பயணம் அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விடுதலை சுடர் பயணத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் அவர்கள் சிற்றுரையுடன் சுடரேற்றி பயணத்தை தொடக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து யேர்மனி அரசின் மணித உரிமை ஆணையாளர் Christoph Strässer அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்து கடிதம் தமிழ் இளையோர் அமைப்பால் வாசிக்கப்பட்டது. அவர் தனது கடிதத்தில் அவர் வெளிநாட்டு பயணம் ஒன்றில் இருக்கும் காரணத்தால் இன்று அவரால் கலந்துகொள்ள முடியவில்லையெனவும் அதற்காக தனது வருத்தத்தையும் தெரிவித்திருந்தார். அத்தோடு இவ் விடுதலை சுடர் பயணத்திற்கு அவரது ஆதரவையும் இவ் பயணம் வெற்றியடைவதற்கு தனது வாழ்த்தையும் தெரிவித்திருந்தார்.
விடுதலைச் சுடர் முன்ஸ்டர் நகர மையப்பகுதி வழியாக இளையோர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதன்போது சிங்கள அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படும் இனவழிப்பை விபரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டது. மீண்டும் Marienplatz க்கு எடுத்துவரப்பட்ட விடுதலைச் சுடர் மதியம் 12:30 மணிக்கு முன்ஸ்டர் நகரில் நிறைவு செய்யப்பட்டு Osnabrück நகரிட்கு எடுத்து செல்லப்பட்டது.
Osnabrück நகரில் 15:00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச் சுடர் பயணம் நகர மையப்பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 17:00மணியளவில் நிறைவு செய்யப்பட்டது. இதன்போது மக்களிற்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment