August 29, 2016

நம்பகமான- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி லண்டனில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்!

காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் மற்றும் முன்னாள் போராளிகள் உயிரிழப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா, அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
10 Downing street, London, SW1A2AA என்னும் இடத்தில் மதியம் 12 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை இப்போராட்டம் இடம்பெற்றது.

 
2009ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 105க்கு மேற்பட்டவர்களது சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்து நம்பகத் தன்மையுடன் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் காணாமல் போனோர் பற்றிய ஆரோக்கியமான நம்பகத்தன்மையுடைய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

கைதுகள், மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, தமிழ் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படல் ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தினத்தில் இதனை உலகிற்கு உரத்து கூறும் வகையிலும், பிரித்தானிய இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஈழ ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment