August 29, 2016

மேலும் 10 கோடி ரூபாவை விழுங்கப் போகும் எம்.பிக்களின் தொலைபேசி கட்டணம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொலைபேசி கட்டணம் 10 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு தொலைபேசிகளுக்கான கட்டணம் இதுவரை காலமும் அரசினாலேயே செலுத்தப்பட்டு வந்தது.
எனினும் இந்த நடைமுறையில் அரசாங்கம் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
தொலைபேசி கட்டணங்களை செலுத்தாது மாதாந்தம் 50000 ரூபா தொலை பேசிக் கட்டண கொடுப்பனவை வழங்க அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் வருடாமொன்றுக்கு சுமார் பத்து கோடி ரூபா மேலதிக செலவு ஏற்படும் என நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா இரண்டு நிலையான தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி இணைப்புகளுக்கான கட்டணமாக மாதாந்தம் சுமார் 35 லட்ச ரூபா செலுத்தப்படுகின்றது.

எனினும் தொலைபேசி கட்டணமாக 50000 ரூபா வழங்குவதனால் இந்தக் கட்டணத்தொகை மேலும் அதிகரிப்பதாகவும் ஆண்டு தோறும் சுமார் பத்து கோடி ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment