வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் உதவி வீடுகள் அரசாங்கத்தின் தெரிவு ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்கள் ஆறு வருடங்களாக தற்காலிக வீட்டில் அசௌகாரியமான நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தங்களின் தேவைகள் பற்றி கவனம் செலுத்தப்படவில்லை என போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தெரிவு ஊடாக போரினால் உயிரிழந்தோர் அல்லது காணாமல் போனோர் குடும்பங்களுக்கு 10 புள்ளிகள் வழங்கப்பட்டு உதவி வீடுகள் வழங்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் அவ்வாறு புள்ளிகள் இல்லாத மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு இன்னமும் வீடுகள் வழங்கப்படவில்லை.
எனினும் மாற்றுத் திறனாளிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட உதவி வீடுகள் அவர்களுக்கு ஏற்ற வசதிகளைக் கொண்டு அமைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீடுகளில் நுழைவாயில், மலசலகூடம் போன்றவை தங்களுக்கு ஏற்ற வகையில் வசதிகளை கொண்டதாக இல்லை எனவும் தங்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகள், மாற்றுத் திறனாளிகளுக்குரிய வசதிகளை கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment