June 8, 2016

சலாவ குண்டுச் சிதறல்களை மயானத்தில் புதைக்க ஏற்பாடு!

சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் சிதறிக் கிடக்கும், குண்டுகளின் சிதறல்கள்,
அந்தப் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் புதைக்கப்படவுள்ளதாக தொண்டர்படை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக தெரிவித்துள்ளார்.

“கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து, மூடப்பட்டிருந்த அவிசாவளை- கொழும்பு வீதி நேற்றுமாலை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

சலாவ இராணுவ முகாமில் வெடிவிபத்து இருந்த போது, அங்கு 450 படையினர் இருந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் தான், இராணுவத்தினரின் உயிராபத்துக்களை குறைக்க முடிந்தது.

இந்த வெடிவிபத்தை அடுத்து, இடம்பெயர்ந்த 60 வீதமான மக்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

ஏனைய மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ள.சேதமடைந்த வீடுகள் அனைத்தும், இரண்டு மாதங்களுக்குள் திருத்திக் கொடுக்கப்படும்.

சலாவ இராணுவ முகாம் வேறு இடத்துக்கு மாற்றப்படாது. இராணுவ முகாம் பிரதேசம் இன்னமும், பாதுகாப்பற்றதாகவே உள்ளது. சிறிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் துப்புரவுப் பணிகள் முடிவடையும். பொதுமக்கள் வாழும் பகுதிகளில் சிதறிக் கிடக்கும் வெடிபொருள் சிதறல்கள் சேகரிக்கப்பட்டு, சலாவ பிரதேசத்தில் உள்ள மயானத்தின் ஒதுக்குப்புறமாக புதைக்கப்படும்.

10 அடி அகலமான – எட்டு அடி ஆழமான இரண்டு குழிகளில், இவை போட்டு புதைக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment