August 28, 2016

விடுதலை புலிகளில் தொழில் நுட்பம் இலங்கை இராணுவம் வசம்?

இலங்கை இராணுவத்தினர், அடுத்தவாரம் முப்படையினரையும் உள்ளடக்கிய பெரும் போர்ப் பயிற்சி ஒன்றில் ஈடுபட உள்ளனர். எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை “நீர்க்காகம்” எனும் பெயரில் கொக்கிளாய் பகுதியில் போர்ப் பயிற்சி இடம் பெற உள்ளது.


குறித்த போர்ப் பயிற்சியில் சர்வதேச படையினர் 49 வீரர்கள் உட்பட, 3500 இலங்கை படையினர் இந்த பயிற்சியில் பங்கு பற்ற உள்ளனர்.

இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்ற இலங்கை கடற்படையினரின் சண்டைப்படகுகள் விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை என சந்தேகம் வெளிப்படுத்தப்படுகின்றது. இராணுவத்தினர் உருவாக்கியுள்ள படகுகளினதும் விடுதலைப்புலிகளின் படகுகளினதும் ஒற்றுமை காரணமாக இந்த சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

கடந்த வருடம் இலங்கை அரசினால் இத்தகைய போர்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் இலங்கை கடற்படையினரின் பாவனைக் கடற்கலமான “டோராவிற்கு” பதிலாக, கடற்புலிகளிடமிருந்து கைப்பற்றிய சண்டைப்படகுகளின் தொழில்நுட்பத்தை கொண்டு அதே போன்று வடிவமைக்கப்பட்ட சண்டைப்படகுகளை கொண்டே அந்த பயிற்சியை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் 2009வரை இலங்கை கடற்படை தனது பிரதான சண்டைப்படகாக இஸ்ரேலிய தயாரிப்பான டோராப் படகுகளையே பாவித்து வந்தது.

இந்த வகைப்படகுகளே போர் புரிவதற்கு இலகுவானதாக உலக கடற்படையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த படகுகளையே கடற்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை கடற்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து போர் புரிந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பம் காரணமாக இராணுவத்தினரின் முயற்சி தோல்வியடைந்ததுடன் கடற் போரிலும் விடுதலை புலிகள் சிறந்து விளங்கினர்.

2009யுத்தம் நிறைவு பெற்ற போது, இலங்கை அரசிடமிருந்து ஈரானிய அரசு கடற்புலிகளின் போர்த்தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடமிருந்து பெரும் தொகைக்கு வாங்கியதாகவும். கோத்தாபாய ராஜபக்ஷ இதற்கு முழு முதலாக செயற்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக யுத்த நடவடிக்கைகளின் போது அந்த நாடுகளின் யுத்த நிலைமை பற்றியும், ஒவ்வொரு நாடுகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் என்பது உண்மையே.

அதே போலவே புலிகளுக்கும் இலங்கை படையினருக்குமான போரின் உத்திகளையும், ஆயுதங்கள் பற்றியும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமான விடுதலைப்புலிகளில் சொந்த முயற்சியிலும் தொழில் நுட்ப அறிவினாலும் உருவாக்கப்பட்ட சண்டைப்படகுகளின் தொழில் நுட்பம் யுக்தி போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசு பெரும் அளவிலான சண்டைப்படகுகளை உற்பத்தி செய்து வருகின்றது எனக் கூறப்படுகின்றது.

தற்போது நடாத்தப்பட இருக்கும் போர்ப்பயிற்சியின் போதும் இதே வகை சண்டைப்படகுகள் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகின் சிறப்பம்சங்கள்,

அனைத்து காலநிலைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடியது, கனரக ஆயுதங்கள், எரிபொருள் கலன்கள், ஆயுதங்களுக்கான ரவைகள் என பெரும் சுமைகளை ஏற்றியவாறு அதி கூடிய வேகத்தில் பயணிக்க கூடிய அமைப்பு.

சண்டைகளின் போது வேகமாகவும் அதேநேரம் சடுதியாக திரும்பக்கூடியவாறு அடிப்பகுதி அமைக்கப்பட்டிருந்தமை.

குறைந்த உற்பத்திச்செலவு, போன்ற சிறப்பம்சங்கள் காரணமாகவே இத்தகைய தொழில் நுட்பம் இலங்கை இராணுவத்தின் படகுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.







No comments:

Post a Comment