May 24, 2016

ஷாக் ஆக வேண்டாம் - இது அம்மா உத்தரவு தான்!

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் செல்லும் வழியெங்கும் வாழை மரங்கள்,
தோரணங்கள், பேனர்கள், ஆளுயர கட்அவுட்டுகள் என அ.தி.மு.க நிர்வாகிகள் அதகளப்படுத்தினர்.

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்கள் திரும்பும் முன்னரே அதிமுக நடத்திய விழா ஒன்றில் சென்னையின் பல இடங்களில் கட்அவுட் வைத்து மக்களை சிரமத்துக்குள்ளாக்கினர்.

விதிமுறையின்றி வைக்கப்படும் பேனர்களுக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது.

இந்நிலையில், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கடந்த 21ம் திகதி மாலை போடவந்தார்.

அப்போது சாலையில் எந்த கட்அவுட்டையும் பார்க்க முடியவில்லை. எம்.ஜி.ஆர் சிலையைச் சுற்றி தடுப்பு வேலியை மட்டும் போலிசார் அமைத்திருந்தார்கள். 'முதல்வர் வரப் போகிறார்' என்பதை நினைவூட்டும் வகையிலேயே இருந்தது. இது பொதுமக்கள் மத்தியில்ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இன்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நிலையில், விழா நடந்த சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டன் வரையிலும் பேனர், கட்அவுட் என எதுவுமே கண்ணில் தென்படவில்லை. அ.தி.மு.கவின் இந்த அணுகுமுறையை சென்னைவாசிகள் அதிசயத்தோடு பார்த்துச் செல்கிறார்கள்.

இதுபற்றி அ.தி.மு.கவின் தலைமைக்கழக பேச்சாளர் ஆவடிகுமார் கூறுகையில், அம்மா பங்கேற்க வரும் நிகழ்வுகளில் கட்சிக்காரர்கள் விதிமுறைகளை மீறி கட் அவுட் வைப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் எழுந்தன.

அதிகப்படியான பேனர்களை வைப்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது என்று, எதிரிகள் இதனை ஓர் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர்.

எனவே, 'வரும் காலங்களில் கட்அவுட் பேனர் வைக்க வேண்டாம்' என அம்மா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான் நிர்வாகிகள் பின்பற்றுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment