July 30, 2016

ரத்துபஸ்வல வழக்கு ஒத்திவைப்பு!

ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக அந்த பிரதேசத்திற்கு சென்ற பாதுகாப்பு படை உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களை பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.


இந்த வழக்கு கம்பஹா பிரதான நீதவான் காவிந்ரா நாணயக்கார முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வெலிவேரிய - ரத்துபஸ்வல பிரதேசத்தை சேர்ந்த மக்கள் சுத்தமான குடிநீரை கோரி வெலிவேரிய சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது இராணுவத்தினர் தாக்கல் நடத்தினர். இந்த சம்பவம் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைபெற்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பந்தமாக நடத்தும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment