விடுதலைப் புலிகளின் வெடிபொருட்களை வைத்திருக்க உதவிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஆர். நந்தகுமார் என்ற நபருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவருக்கு கூடிய பட்சம் 7 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க முடியும் என தீர்ப்பை வழங்கி பேசிய நீதிபதி ஐராங்கனி பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குற்றவாளி இந்த குற்றச்சாட்டுக்காக 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துள்ளதன் காரணமாக அவரது தண்டனையை குறைத்துள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, விடுதலையான பின்னர், இப்படியான குற்றங்களில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுமாறு குற்றவாளிக்கு எச்சரிக்கை விடுத்தார்.

No comments:
Post a Comment