July 30, 2016

வடக்கில் தனிநாடு அமைந்தால் அங்கு தண்ணீருக்கு பஞ்சம்!

வடக்கில் தனியான நாடு இருந்திருக்குமாயின் அந்த நாட்டில் தண்ணீர் இல்லை என்பதை வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட தனி நாடு கோரி கோஷமிடும் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பழைய கிணறுகளே உள்ளன. இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவதை வன்னி மக்கள் எதிர்க்கின்றனர்.

ஆனால் மொரகாஹகந்த திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணத்திற்கு தண்ணீர் வழங்குவதை தென் பகுதியில் உள்ள சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை.

இரணைமடு குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்திலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு பாரிய அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த நடவடிக்கையில் அனைவரும் இணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment