July 30, 2016

பளையில் வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்காட்டு சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி குறித்தபகுதியில் அமைந்துள்ள கடைகளை சேதமாக்கியுள்ளது. குறித்த விபத்தில் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதிநித்திரையில் வாகனம் செலுத்தியமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

குறித்தவாகனம்வீதியை விட்டுவிலகி குறித்த பகுதியில் அமைந்துள்ள 3கடைகளை சேதப்படுதிதியதுடன் கடைகளிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது

விபத்து தொடர்பிலான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



No comments:

Post a Comment