April 23, 2014

யாழில் அடுத்த அனாமதேய சுவரொட்டி: கலக்கத்தில் இராணுவம்!


புலிகள் மீள இணைகிறார்கள், என்று சொல்லி இலங்கை இராணுவம் 3 பேர்களது படத்தை அச்சடித்து சுவரில் ஒட்டியது. பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றார்கள். அதன் பின் "தமிழீழம் மலரும்" என்று ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்ததாக கூறி மூவரைக் கைதுசெய்தார்கள். இந்தப் பிரச்சனை எல்லாம் ஓய முன்னர், நேற்றைய தினம்(22) யாழ் இராசாவின்தோட்டம்- புகையிரதநிலையம் , வைமன் வீதி என்று பல இடங்களில் மேலும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் "யாருக்கு எதிராக இந்த வாள்" என்ற வாசகங்கள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிய வாள் ஒன்றின் படமும்
போடப்பட்டுள்ளது. இது எதனைக் குறிக்கிறது ? என்று தெரியாமல் மக்கள் மட்டுமல்ல இராணுவத்தினரும் திகைத்துப்போய் உள்ளார்கள். ஏக காலத்தில் கிளிநொச்சியிலும் சில இடங்களில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இது வியாபார விளம்பரமா இல்லை விபரீதமான சுவரொட்டியா என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இதில் உள்ள வாசகத்தை வாசித்தால் , அதில் பல பொருள் (அர்தங்கள்) உள்ளதாக தென்படுகிறது அல்லவா ? இதேவேளை இதனை இரவோடு இரவாக யாரோ அச்சடித்து ஒட்டியுள்ளார்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. எது எவ்வாறு இருந்தாலும் , இலங்கை இராணுவம் நிம்மதியாக இருக்கவில்லை என்பதுமட்டும் நன்றாக புலப்படுகிறது

No comments:

Post a Comment