August 29, 2016

தோண்டத் தோண்ட கிடைக்கும் துப்பாக்கி பாகங்கள் : அதிர்ச்சியில் வவுனியா!

வவுனியா-ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் 38 மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்குமார இன்று தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வியாழக்கிழமை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றினை சுத்தம் செய்த போது அதில் புதையுண்ட நிலையில் துப்பாக்கிகள் இருப்பதைக் கண்ட காணி உரிமையாளர் ஓமந்தைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.இதனையடுத்து ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் 30 எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டன.

இதனையடுத்து அப்பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனக் கருதிய பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட வவுனியா நீதிமன்றின் அனுமதியைக் கோரியிருந்தனர்.
வவுனியா நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து வவுனியா நீதிமன்ற பதிவாளர் எம்.எஸ்.அமரட்ண முன்னிலையில் இன்று காலை விசேட அதிரடிப்படையினரால் மீண்டும் தோண்டும் பணிகள் இடம்பெற்றது.

இதன்போது 8 எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டது. இவ்வாறாக இவ் விடத்தில் இருந்து 38 எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் மீட்கப்பட்டதாக ஓமந்தை பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இப்பகுதியில் முன்னர் இராணுவ முன்னரங்க காவல் நிலைகள் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வவுனியா, ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் இருந்து 3 கிலோ எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment