August 27, 2016

பான் கீ மூனின் வருகை - சந்தேகம் கிளப்புகிறார் வாசுதேவ!

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அவசரமான இலங்கை விஜயம் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. சர்வதேச விசாரணைகளுக்கு உள் நாட்டில் இடமில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராகிறார் டரான்ஜித் சிங் சந்து!

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் நிறைவடைகின்ற நிலையில், புதிய இந்திய தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலித் தளத்தைச் சுற்றியுள்ள காணிகள் விடுவிக்கப்படாது! - யாழ். படைகளின் தளபதி !

குடாநாட்டில் படையினர் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகள் அனைத்தும் 2017 ஆம் ஆண்டு நிறைவுக்குள் விடு விக்கப்படும்.

ஈழத்தில் போராளிகள் உணவின்றி சகா கனடாவில் தமிழர்கள் செய்யும் கேவலமான தொழில்! வீடியோ!

தமிழ் இனத்துக்காக போராடி பல இன்னல்களை அனுபவித்து குடும்பங்களை இழந்து உணவின்றி தவிக்கும் முன்னாள் போராளிகளை மறந்து கனடாவில் பல கோடிகளை

இன்று தற்கொலை! லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிக்கல்!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஜி தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி கிளம்பி வருகிறது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்கள் தாங்கள் எதற்கு அழைக்கப்படுகிறோம் என்று தெரியாமல் வருவார்கள்.

ஊற்றுப்புலம் சிறுவனின் சிகிசைக்கு பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கம் ஒரு இலட்சம் உதவி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஊற்றுப்புலம் கிராமத்தில் வசிக்கும் பிறேம்குமார் டனுஜன் வயது 11 எனும் சிறுவன் சிறு விபத்து ஒன்றில் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிசை மேற்கொள்வதற்கு பதினைந்து இலட்சம் தேவை  என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிசார் ஐவருக்கு எதிராக கொலை குற்றசாட்டு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த ஐந்து பொலிசாருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு  சட்டமாஅதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக  பிரதான பொலிஸ் பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.

சிறப்பு வைத்திய நிபுணர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை! - கிழக்கு மாகாணசபை நடவடிக்கை!

இலங்கையிலுள்ள சிறப்பு தேர்ச்சி வாய்ந்த வைத்திய நிபுணர்களைக்கொண்டு முன்னாள் போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச்சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏல்.எல்.முஹம்மட் நசீர் தெரிவித்தார்.

நல்லிணக்கத்துக்கான பேரணி யாழ். நாகவிகாரையில் ஆரம்பம்! - அம்பாந்தோட்டை வரை செல்கிறது!

மனித உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் சமாதானத்தினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான பேரணி இன்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமானது. அம்பாந்தோட்டை வரை இந்தப் பேரணி இடம்பெறவுள்ளது.

தன் மீது தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காட்டினார் உபாலி தென்னக்கோன்!

தன் மீது தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரியை ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு இன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவில் நீதி கோரி உண்ணாவிரதம் இருந்தவர்கள் இருவரின் உடல்நிலை பாதிப்பு!

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேசெயலர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில், தாய், மற்றும் தந்தை ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பிரதேசத்தில் 30 கிலோ கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பிரதேசத்தில் 30 கிலோ கஞ்சா பொதியுடன் 39 வயதுடைய ஒருவர் இன்று அதிகாலை மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமற்போனோர் நிலையை அறிந்து கொள்ளும் பேராளர் மாநாடு கொழும்பில்! - சர்வதேச மன்னிப்பு சபை அனுசரணை !

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும், காணாமல் ஆக்கப்பட்ட அல்லது காணாமல்போன உறவுகளின் நிலைப்பாட்டை அறிந்தும் கொள்ளும் வகையிலான பேராளர் மாநாடு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

August 26, 2016

'மக்களின் கருத்துக்களை அன்றும் கேட்கவில்லை'இன்றும் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை!

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த தேசிய அரசாங்கமொன்றே 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்று மக்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை அதேபோல, இன்றும் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

வடக்கும் தெற்கும் இணையவே 'நல்லிணக்கம் உருவாக்கப்பட்டுள்ளது'

கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கான பாலங்களை அமைத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கத்தினால், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான மனரீதியான பாலத்தினை அமைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மேலும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் 49 வெளிநாட்டுப் படையினர்!

சிறிலங்கா இராணுவம் அடுத்தவாரம் நடத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில், 49 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

ஆசிய நாடுகளின் கத்தோலிக்க மேற்றாணியார்களின் சர்வதேச மாநாடு இலங்கையில்!

ஆசிய நாடுகளின் கத்தோலிக்க மேற்றாணியார்களின் சர்வதேச மாநாடு இம்முறை இலங்கையில் நவம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

யுத்ததால் இரண்டு கண்பார்வையை இழந்த இளைஞர் உதவித்தொகை!

சுவிஸ்சர்லாந்து ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி கோவில் கிளிநொச்சியை சோர்ந்த யுத்ததால் இரண்டு கண்பார்வையை இழந்த இளைஞர்களின் கல்விக்கான உதவித்தொகை வழங்கியுள்ளது.

19 வயது கர்ப்பிணிப்பெண் சடலமாக மீட்பு!

திருகோணமலை - சிங்கப்புரப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப்பெண் ஒருவரின் சடலத்தை இன்று மீட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

த.தே.கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் பீ.ஜீ.பியசேனவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கோட்டை நீதவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று (26) பிறப்பித்துள்ளார்.

விடைபெறுகிறார் ஒபாமா! - சாதித்தது என்ன?

நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான்.

மீண்டும் தனது சுயரூபத்தை காட்டும் பசில்! தலைதெறிக்க ஓடும் மஹிந்த அணி!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சியான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவையும் கவனியுங்கள் - அன்ரனி ஜெகநாதன் , கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தை யாருமே கவனிக்கின்றார்கள் இல்லை. ஊடகங்கள் கூட முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

காணாமால் போனவர்களின் உறவுகளுக்காக வடமாகாண சங்கம் ஒன்றை உருவாக்க தீர்மானம்!

வடமாகாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளுக்காக வடமாகாண சங்கம் ஒன்றை அமைக்க மூன்றுபேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

காணாமல் போன மாணவியை விடுவிக்க 75 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது: காதலின் பின்னால் கப்பமா?

காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

ரிஷாத் பதியுதீனிடம் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னிலையானார்!

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை முன்னிலையானார்.

3200க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்தில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்!

3200 க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் யாழ்ப்பாணத்தில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அன்று மாடு மேய்க்கும் சிறுமி...இன்று கல்வி அமைச்சர்!


சரியான வழிகாட்டுதலும் கல்வியும் இருந்தால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ள பெண்ணும் உயர்ந்த நிலை அடையலாம் என நஜாத் என்ற பெண் நிரூபித்திருக்கிறார்.

சொத்துக்காகக் கொல்லப்பட்டாரா ஓஷோ?

‘நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது’’ என்பார் ஓஷோ.

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து மரங்கள் நாட்டப்பட்டு… !

ஐக்கிய அமெரிக்காவின் – டப்ளின், ஓஹியோ, மெக்சிக்கன் ஆகிய இடங்ளில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூர்ந்து மரங்கள் நாட்டப்பட்டு அவை பெரும் விடுட்சமாகி இருப்பதை இப்போது காணமுடிகிறது.

இலங்கை தமிழர்களைச் சாடிய இயக்குநர் சேரன்!

இயக்குநர் சேரன் இலங்கை தமிழர்களை சாடி பேசியுள்ளார். ‘கன்னா பின்னா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

30 எல்.எம்.ஜி துப்பாக்கிகள் ஓமந்தையில் மீட்பு!

விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்டவை என சந்தேகிக்கப்படும் 30 எல்எம்ஜி துப்பாக்கிகள் ஓமந்தை பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

விச ஊசி குற்றச்சாட்டை சுமத்திய அரசியல் கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதி க்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

வடமராட்சியில் சிக்கியது அதிசய வெள்ளை நாகம்!

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பிரதேசத்தில், சுமார் ஆறு அடி நீளமான அரிய வகை வெள்ளை நாகபாம்பு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்காக போராடிய பிரபாகரன் ஏன் அவர்களின் தலைவராக இருக்க முடியாது? - சிவமோகன் எம்.பி கேள்வி !

தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச சிங்கள பேரினவாதிகளுக்கு தலைவராக இருப்பாரானால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய

பிரித்தானியாவில் மலையில் இருந்து குதித்து தமிழ் வாலிபன் பலி – அதிர்ச்சியில் மனைவி!!

ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .

தமிழ் மொழி கற்பிக்கும் தேரர்!

“பிற மொழி­யையும் தெரிந்து வைத்­தி­ருங்கள். அது பிற­ரோடு பழக உதவும். அடுத்­த­வரை அணுக உதவும். வெறும் மொழிப்­பித்து என்­பது உங்­களைக் கிணற்றுத் தவ­ளை­யாக்­கி­விடும்.

பிரேமதாசாவிற்கு ஏற்பட்ட கதியே மைத்திரிக்கும்"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை1

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் நேரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தலைமைகளின் காத்திருப்பு அரசியல் எங்கே கொண்டு செல்கிறது?

தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் சார்ந்த அனைத்து விடயங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேல் சுமத்தப்பட்டுள்ளது.

நோபல் பரிசுக்கு ஆசைப்பட்ட மகிந்த!

ஆசியாவின் மண்டேலாவக தன்னை மக்கள் கருதவேண்டுமென்ற எண்ணம் கடந்த அரசாங்கத்தின் போது மகிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்ததாக அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழரால் சிக்கலில் தெரேசா மேய்!

பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய், முன்னர் உள்துறை செயலாளராக இருந்த காலப்பகுதியில், ஈழ அகதி ஒருவர் நாடுகடத்த உத்தவிரவிட்டமை தொடர்பில் ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

முற்றவெளியில் பொங்குதமிழ்!

எதிர்வரும் 14ம் திகதி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் ஒன்றுகூடல் மற்றும் கண்டனப்பேரணிக்கு பல்வேறு தரப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்திவருகின்றன.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்???

பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு மாவனல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலத்தில், மர்ம உறுப்பு பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தகர் கப்பம் கோருவதற்கு முன்னரே கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

லண்டனில் ஒரு குடும்பத்தில் இரு ஈழத் தமிழரை பலி எடுத்த காலன்!!! கண்ணீரில் குடும்பம்…!

இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்று (புதன்கிழமை), 5 சடலங்கள் கண்டடெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

August 25, 2016

புலிகள் மீது பயம் கொள்ளும் மஹிந்த!

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து விட்டது. நாட்டில் தற்போது விடுதலைப்புலிகளோ அல்லது பயங்கர வாதமோ இல்லை என அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

மீண்டும் அதிர்கின்றது ஆனந்தபுரம்!

அதி உச்சகட்ட போர் நடவடிக்கை நடைபெற்ற முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் HDU.SLA இராணுவ படையினரால் மீட்கப்பட்ட குண்டுகள் தாக்கி அழிக்கப்படுகின்றது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பிணையில் விடுதலை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்ட மாணவர் ஒன்றியத்தலைவர் சி.சிந்திரனின் வழக்கு விசாரணையினை எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் ஒத்திவைத்துள்ளார்.

மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது !

மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னன் பண்டாரவன்னியனின் 213 வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு!

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனும் தேசிய மாவீரனும் ஆன பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றிய நினைவு நாள் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.