சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவரை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த ஐந்து பொலிசாருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதாவன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி இளைஞர்கள் சிலர் மீது திருட்டுக்குற்றம் சுமத்தி சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை கைது செய்த பொலிசார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து , மின்சாரம் பாய்ச்சி , சித்திரவதை படுத்திய போது அதில் சிறிஸ்கந்தராசா சுமணன் எனும் இளைஞர் உயிரிழந்து உள்ளார்.
அதனை அடுத்து உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இரணைமடுக் குளத்தினுள் வீசி விட்டு குறித்த இளைஞர் திருட்டு பொருட்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தை காண்பிப்பதாக தம்மை கிளிநொச்சிக்கு அழைத்து சென்று , தம்மிடம் இருந்து தப்பியோடி இரணைமடுக்குளத்தினுள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் குறித்த திருட்டு வழக்கு கடந்த மாதம் 25ம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னையிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அதன் போது தமது சட்டத்தரணியின் ஊடாக தமது நண்பனை சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டாரவும் (தற்போது கொடிகாம பொலிஸ் பொறுப்பதிகாரி) அவருடன் இணைந்து மூன்று தமிழ் பொலிசார் உட்பட எட்டு பேர் பொய் குற்றசாட்டு சுமத்தி தம்மை கைது செய்து சித்திரவதை பண்ணியதாகவும் , அதில் தமது நண்பன் உயிரிழந்ததாகவும் , உயிரிழந்த நண்பனின் உடலை இரணைமடுக் குளத்தில் வீசி விட்டு தற்கொலை என பொலிசார் கூறியதாகவும் மன்றில் தெரிவித்தனர்.
அதனை அடுத்து அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசார் அனைவரையும் கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக மன்றில் முன்னிலையான பிரதான பொலிஸ் பரிசோதகர் , சட்டமா அதிபர் திணைக்களத்தால் பொலிசாருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலை மன்றில் முன் வைத்தார்.
அதில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேரில் ஐவருக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் , அதேவேளை குறித்த எட்டு பொலிசாருக்கு எதிராகவும் சித்திரவதை குற்றசாட்டு சுமத்தி யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டு உள்ளதாக மன்றில் முன்னிலையான பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
அதனை அடுத்து வழக்கு எதிர்வரும் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment