கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஊற்றுப்புலம் கிராமத்தில் வசிக்கும் பிறேம்குமார் டனுஜன் வயது 11 எனும் சிறுவன் சிறு விபத்து ஒன்றில் தலையில் இரத்த கசிவு ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிசை மேற்கொள்வதற்கு பதினைந்து இலட்சம் தேவை என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கூலித் தொழிலை மேற்கொள்ளும் தந்தை மகனின் சிகிசைக்கு பலரிடமும் உதவி கோரியுள்ளார். அதனடிப்படையில் கிளிநொச்சி பனை தென்னை வளக் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தனது பணியாளர்கள்,அங்கத்தவர்கள், மற்றும் சங்க நிதியிலிருந்தும் சேகரித்த ஒரு இலட்சம் ரூபாவை குறித்த சிறுவனின் பெற்றோரிடம் கையளித்துள்ளனர். ,
இந் நிகழ்வுகடந்த கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது சங்கத்தின் தலைவர் மதனரூபன்,பொது முகாமையாளர் துரைசிங்கம்,ஊற்றுப்புலம் கிராம அலுவலர் யதுகுலன் ஆகியோர் சிறுவனின் பெற்றோரிடம் கையளித்தனர்.
குறித்த நிதியை பெற்றுக்கொண்ட சிறுவனின் பெற்றோர்கள் மனம் நெகிழந்து நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு, இதுவரை தங்களுக்கு பல உதவும் உள்ளங்களிடமிருந்து ஜந்து இலடச்ம் ரூபா வரை நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலும் பத்து இலட்சம் தேவையாக உள்ளதாகவும் தெரிவித்த அவர் தனது பதினொரு வயது மகனின் உயிரை காப்பாற்ற உதவும் உள்ளங்களிடமிருந்து உதவியை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.
சிகிசையை மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே உதவும் உள்ளங்கள் 0766770518 எனும் சிறுவனின் தந்தையான பிறேம்குமாரின் தொலைபேசி இலகத்திற்கு தொடர்பை மேற்கொண்டு உதவ முடியும்.

No comments:
Post a Comment