August 27, 2016

இன்று தற்கொலை! லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிக்கல்!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஜி தமிழ் தனியார் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் அடிக்கடி கிளம்பி வருகிறது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுபவர்கள் தாங்கள் எதற்கு அழைக்கப்படுகிறோம் என்று தெரியாமல் வருவார்கள்.


 வந்தவுடன் அவர்களிடம் இது போன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள் வாருங்கள் உட்கார்ந்து பேசலாம் என்று அழைப்பார்கள்.


சார் கேமரா எல்லாம் வேண்டாம் என்று வருபவர்கள் சொல்லும்போது கேமரா எல்லாம் இல்லைங்க சும்மா கவுன்சிலிங் என்று கூறுவார்கள் , உள்ளே போகும் போது திடீரென ஒரு படிவத்தை கொடுத்து கையெழுத்து வாங்கிவிடுவார்கள்.

இதனால் பயந்து போகும் அவர்கள் நிகழ்ச்சியில் கேமரா வைத்து எடுப்பதை ஆட்சேபிப்பதில்லை. நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என்று கூறிவிட்டு திடீரென ஒளிபரப்புவார்கள்.


நிகழ்ச்சி ரெக்கார்ட் ஆவது தெரியாமல் ஒருவரை ஒருவர் பற்றி ஆதாரமில்லாமல் பேசுபவை எல்லாம் ரெக்கார்ட் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும். இது நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மிகுந்த மன உலைச்சலை கொடுக்கும்.

 இது பற்றி தொலைக்காட்சியை சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், நீங்கள் ஒத்துகொண்டு கையெழுத்து போட்டுள்ளீர்கள் என்று கூறுவார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் பயந்துபோய் ஒதுங்கி விடுவார்கள்.

 சிலர் வழக்கும் போட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் (60) என்பவர் இதுபோன்றதொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அவமானப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

 மேடவாக்கத்தை சேர்ந்த நாகப்பன் இரண்டு லாரிகள் சொந்தமாக வைத்திருந்தார். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மைத்துனி ரேணுகாவிடம் நெருக்கமாக வாழ்ந்துள்ளார்.

ஆனால் நிகழ்ச்சியில் நாகப்பன் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் தனது மகள்களிடம் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றச்சாட்டு கூறியது ஒளிபரப்பானது. இதனால் மனமுடைந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் தங்கள் தந்தை மரணத்திற்கு சொல்வதெல்லாம்  உண்மைதான் காரணம் என்று  மகள் ஆதி , மகன் மணிகண்டன் ஆகியோர்  குற்றம்சாட்டியுள்ளனர்.   தனது தந்தை சாவுக்கு நியாயம் வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளனர்.

நிகழ்ச்சி தொகுப்பாளரே நீதிபதி போல் தீர்ப்பு கூறியதால் மனமுடைந்து போனார் தனது தந்தை என்று மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

வியாபார நோக்கத்துடன் குடும்பங்களில் சாதாரண சண்டைகளை பூதாகரமக்கி அவர்களது அந்தரங்கத்தை படம் பிடித்து போட்டு அதன் மூல காசு பார்த்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடும்பத்தினரை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என நாகப்பனின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment