முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சியான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தரப்பின் அதிகாரத்தை தன் கையில் பெற்றுக் கொள்வதற்காக நுட்பமாக செயற்பட்ட பசில் ராஜபக்ச தற்போது வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொண்டு தனது சுயரூபத்தை உயர்த்திக் கொள்வதற்காக ஊடக செயற்பாடொன்றை ஆரம்பித்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பசில் ராஜபக்சவுக்கு பல சந்தர்ப்பங்களில் விளக்கமறியல் செல்ல நேரிட்டது. அவர் தனது சுயரூபத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் நேற்று மஹிந்த தரப்பு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியே சென்ற பிரதிநிதிகளிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கோபமாக பதிலளித்துள்ளதுடன், அங்கு மஹிந்த தரப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் பசில் ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ளூராட்சி பிரதிநிதிகள் தனியாக செயற்படுவதற்கும், கட்சியின் மாநாட்டில் கலந்துக் கொள்ளாமல் இருப்பதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகுவதற்கும் எதிர்வரும் தேர்தலில் பசில் ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தனியாக கட்சி அமைக்கப்படாதென மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார் என ஊடகவியலாளர் ஒருவர் கூறியதற்கு “எங்களுக்கு மஹிந்தவின் கதைகள் அவசியம் இல்லை. மஹிந்த இருந்தாலும் இல்லை என்றாலும் நாங்கள் கட்சி ஒன்றை உருவாக்குவோம்” என தெரிவித்துள்ளனர்.
பசில் ராஜபக்சவின் வரவை தொடர்ந்து எதிர்த்தரப்பின் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அலுத்கமகே, குமார வெல்கம ஆகிய பலர் அவருக்கு எதிராக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டினால் அவருக்கு மஹிந்த தரப்பில் செயற்படுவதற்கான வாய்ப்பை விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அலுத்கமகே, குமார வெல்கமவினால் வழங்க நேரிட்டுள்ள நிலையில் திரைக்கு பின்னால் செயற்படுவதற்கான சந்தர்ப்பம் பசில் ராஜபக்சவுக்கு வழங்குப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
பசில் ராஜபக்ச ஒரு சூழ்ச்சிக்காரர் எனவும் நாங்கள் அரசாங்கத்திற்கு செல்வதாக கருத்துக்களை அவரே பரப்பி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த குறிப்பிட்டிருந்தார்.
எப்படியிருப்பினும் தற்போது வரையில் பசில், விமலின் திரையை கிழித்துக் கொண்டு மேடையில் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment