முல்லைத்தீவு மாவட்டத்தை யாருமே கவனிக்கின்றார்கள் இல்லை. ஊடகங்கள் கூட முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு சமனான உரிமை வழங்கப்பட வேண்டும். தனியே யாழ்ப்பணத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
இதுவரை காலமும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் யாழ்ப்பாணத்தில் வலி.வடக்கு தவிர வடக்கில் உள்ள ஏனைய காணிகள் எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகலில் 617 ஏக்கர் , கேப்பாபிளவு உள்ளிட்ட பல இடங்கள் இராணுவம் வசமுள்ளது. அதனை மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோர தயக்கம் காட்டுகின்றார்கள்.
நாங்கள் இங்கே வடமாகாண சபையில் அது பற்றி பேசினால் அதனை ஊடகங்கள் செய்தியாக கூட போட தயக்கம் காட்டுகின்றார்கள்.
இந்த செயற்பாடுகளை கண்டித்து பேசினால் பிரதேசவாதம் பேசுகின்றோம் என கூறுவார்கள்.
மக்களை எந்நேரமும் ஏமாற்றலாம் என யாரும் நினைக்க கூடாது. இன்றைய நிலைமையில் கைநாட்டு வைப்பவருக்கு கூட அரசியல் தெரியும். என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

No comments:
Post a Comment