May 24, 2016

புதுக்குடியிருப்பில் மாபெரும் முத்தமிழ் விழா அழைப்பு!

28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது.

இதில் 30ற்கும் மேற்பட்ட வீதி நிகழ்வுகளான இனியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், காவடி மற்றும் வேறு நிகழ்வுகளையும் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, கோவலன் கூத்து, அரிச்சந்திர மயானகாண்டம், சமூக நாடகம், பண்டாரவன்னியன் போன்ற தெரிந்தெடுக்கப்பட்ட எமது கலைஞர்களின் 05 மேடை நிகழ்வுகளும் நிகழ்த்த தீர்மானித்துள்ளோம். இந்நிகழ்வில் 5000 ற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக கிராமத்துக்கு கிராமம் இலவச பஸ் போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதம விருந்நினர்களாக திரு.நாசர் (பிரபல திரைப்பட நடிகர், தென் இந்திய நடிகர் சங்கத் தலைவர் மற்றும் பாரம்பரிய நாட்டுக்குத்து கலைஞர்) மற்றும் திரு.சண்முகராசா(தென் இந்திய குணச்சித்திர நடிகர் மற்றும் நிகழ்நாடக மன்ற கூத்துப்பட்டடை நிறுவுனர்) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். மேலும் வடமாகாண சபை உறுப்பினர்கள் 30 பேர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இந் நிகழ்வில் இந்நிகழ்வை மேலும் சிறப்பிக்க தங்களது ஊடக அனுசரனையை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காலம் – 28.05.2016 சனிக்கிழமை, மாலை 2.30 மணி
இடம் – புதுக்குடியிருப்பு நகரம்
“வாரீர் தமிழர் மண் கலாச்சாரம் காப்போம்”
ஒழுங்கமைப்பாளர்கள்
வன்னி குறோஸ் கலாச்சார பேரவை

No comments:

Post a Comment