August 27, 2016

நல்லிணக்கத்துக்கான பேரணி யாழ். நாகவிகாரையில் ஆரம்பம்! - அம்பாந்தோட்டை வரை செல்கிறது!

மனித உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் சமாதானத்தினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான பேரணி இன்று யாழ்ப்பாணம் நாகவிகாரையில் ஆரம்பமானது. அம்பாந்தோட்டை வரை இந்தப் பேரணி இடம்பெறவுள்ளது.


 
இது குறித்து மனித உரிமை இயக்கத்தின் தலைவர் ஜெயந்த கலபோவல தெரிவிக்கையில், இலங்கை தேசத்தில் வாழும் மூவின மக்களும், எல்லா மதத்தவரும், ஓற்றுமையோடும் சமாதானத்தோடும் சமஉரிமையோடும் வாழ வேண்டுமெனவும் இலங்கை தேசம் மக்கள் வாழ்வதற்கான சிறந்த நாடாகவும் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய நாடாகவும் இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

இந்த சமாதான பேரணி பற்றி மனித உரிமை இயக்கத்தின் தேசிய இணைப்பாளர் சத்தியபாலன் தெரிவிக்கையில், இலங்கை தேசத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சம உரிமை பெற்று வாழ வேண்டுமென தெரிவித்தார். மூவீன மக்களும் நிம்மதியாக இந்நாட்டில் வாழ வேண்டுமெனவும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே இப்பேரணி நடாத்தப்படுவதாகவும் எமது வேண்டுகோளின்படி இலங்கை அரசாங்கம் மக்களுக்கு சரியான தீர்வினை வழங்கும்படி யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவிலிருந்து தாம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

இப்பேரணி குறித்து மனித உரிமை இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சிவராசா தெரிவிக்கையில்இ லங்கை தேசத்தில் யுத்தம் முடிவடைந்த நிலையில் சமாதானம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இதுவரை எதுவித சமாதானமும் ஏற்படவில்லை. தமிழ் முஸ்லிம் மக்களுடைய உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் இலங்கை முழுவதும் சமாதானம் வேண்டியும் இப்பேரணி இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.

இன்று நாகவிகாரையில் ஆரம்பித்த இப்பேரணி நல்லூர் கோயில், யாழ் மாவட்டச்செயலகம், கைதடிப் பிள்ளையார் கோயில், சாவகச்சேரி முத்துமாரி அம்மன் கோயில், இராமாவில் கந்தசாமி கோயில், உசன் தேவாலயம், பழைய அம்மன் கோயில், மகாதேவா சுவாமிகள் சைவ சிறுவர்கள் இல்லம் என்பவனவற்றினூடாக இரவு கிளிநொச்சியை சென்றடையும்.






No comments:

Post a Comment