தன் மீது தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரியை ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு இன்று இடம்பெற்றது.
பதில் நீதவான் மஹேஷ் ஹேரத் முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் சந்தேகநபரை அடையாளம் காட்டினர்.
தன் மீதான தாக்குதல் குறித்த கடந்த காலத்தில் நீதியான விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும் காலம் கடந்தாவது விசாரணை இடம்பெறுவதை வரவேற்பதாகவும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் உபாலி தென்னக்கோன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment