முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேசெயலர் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரில், தாய், மற்றும் தந்தை ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமக்கு 7 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் பக்க சார்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்தியும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசெயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைத்சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை நேற்று காலை ஆரம்பித்தனர்.
குறித்த பகுதியில் தாம் 83 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வருவதாகவும், தமது காணியை பிறிதொரு நபர் உரிமை கோரி வந்த நிலையில் காணி பிணக்கு 7 வருடமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கும் குறித்த குடும்பத்தினர், இன்று வரை தமக்கான நீதி வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட தாய், தந்தை உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment