இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக டரான்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் நிறைவடைகின்ற நிலையில், புதிய இந்திய தூதுவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் கொன்சூலராக அவர் செயற்பட்டிருந்தார்.
2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தை காலத்திலும் டரான்ஜித் சிங் சந்து இலங்கையில் பணியாற்றியிருந்தார். ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முன்னெடுத்த அவர், 1988 ஆம் இந்திய வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டார்.

No comments:
Post a Comment