August 25, 2016

புலிகள் மீது பயம் கொள்ளும் மஹிந்த!

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து விட்டது. நாட்டில் தற்போது விடுதலைப்புலிகளோ அல்லது பயங்கர வாதமோ இல்லை என அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.


இது வரைக்காலமும் யுத்தத்தினை நான் தான் நிறைவு செய்தேன் என மார்தட்டிக் கொண்ட மஹிந்த தற்போது விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை நான் முழுமையாக நிறைவு செய்யவில்லை ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கு யுத்தம் நிறைவடைந்தே காணப்பட்டது அதன் மீதிப் பாதியினையே நான் நிறைவு செய்தேன்.

இவ்வாறு யுத்தத்தில் சிறிதளவு பங்கு கொண்ட என்மீதே புலிகள் தற்போது கோபம் கொண்டுள்ளார்கள் என்றே மஹிந்த அதிகமாக தற்போது அழுத்திக் கூறி கருத்து தெரிவித்து வருகின்றார்.

இது வரைக்காலமும் யுத்தம் தன்னாலேயே நிறைவு செய்யப்பட்டு வந்தது எனக்கூறிவந்த மஹிந்த தற்போது மாற்றுக் கருத்தினை கூறுவது ஏன்?

விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர் மிகப்பெரிய உண்மையை வைத்துள்ளார், இறுதியுத்தத்தில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் தப்பிக் கொள்வதற்காக மஹிந்த இவ்வாறு தெரிவித்து வருகின்றார் என்றும் கருத்துகள் காணப்படுகின்றது.

அவ்வாறு இலங்கை யுத்தம் தொடர்பில் இன்னொருவர் மீது பழி சுமத்தப்படுவது என்ன காரணத்தினால்?

இது ஒரு புறம் இருக்க முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் விடுதலைப்புலிகள், தற்போது எவ்வாறு மஹிந்த மீது கோபம் கொள்வார்கள்? என்ற சந்தேகத்தினை அவதானிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துகளுக்கமைய இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டார்களா என்பதும் சந்தேகமாகிவிட்டது.

அவ்வாறு இல்லை என்றால் மஹிந்த புலிகள் என்று யாரை இங்கு கூறுகின்றார்? தற்போது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பேசி வரும் அரசியல் வாதிகளையா? எனவும் சந்தேகங்கள் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களையும் மஹிந்த தன் பக்கம் இழுக்கின்றார் என்பது அண்மையில் இவர் கொரியா விஜயம் மேற்கொண்டு நிகழ்த்திய உரையின் மூலம் தெளிவு படுகின்றது.

தற்போதும் தொடர்ந்து மஹிந்த வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார். வெறும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இவ்வாறு வெளிநாடுகளில் வரவேற்புகளும் கிடைக்கப்பெறுவது எதனால்? அங்கு சென்று பிரச்சார கூட்டங்களை மேற்கொள்வது எதற்காக என்பதும் வெளிப்படுத்தப்படவில்லை.

இலங்கை வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் தொடர்ந்தும் மௌனித்து வருவதும் எதற்காக என்பதும் புலப்படவில்லை. இவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றது வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்வதற்காக மட்டும் தானா? எனவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

மேலும், இலங்கை அரசு விடுதலைப்புலிகள், விஷ ஊசிகள், படையினர் வசமுள்ள காணிகள் ,போர்குற்றங்கள் போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் மௌனித்து வருகின்றதனை பார்க்கும் போது அரசு மற்றும் முன்னால் தலைவர்கள் அனைவரும் இணைந்து ஓர் சதித்திட்டம் தீட்டுவதாகவே தோன்றுகின்றது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகள் வழுப்பெற்றுக்கொண்டு வருகின்றதனை, அமெரிக்கக் கடற்படையின் யு.எஸ்.எஸ். புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் அண்மையில் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தது.

மற்றும் கடந்த வருடம் ஏப்ரல் 17ஆம் திகதி, அமெரிக்கக் கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான, யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் கப்பல் இலங்கை வந்ததும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடற்படைத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கப்பலுக்கு சென்றது தொடர்பிலும் சந்தேகமே.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது எதற்காக?

இவ்வாறாக பலவற்றை ஆராய்ந்து நோக்கு வோமானால் இலங்கையில் உரிமைப்போர் மற்றும் இறுதியுத்தத்தில் நிகழ்ந்தது என்ன? அரசு திட்டமிட்டு கூட்டுச்சதி செய்து கொண்டு வருகின்றதா? என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது இலங்கை அரசு இது தொடர்பில் உண்மைகள் கூறா விட்டால் பாரிய சந்தேகக் கணைகள் நல்லாட்சி மீது ஏற்படும் எனவும் அவதானிகள் கூறிவருகின்றனர்.

அதே சமயம் விடுதலைப் புலிகள் தொடர்பில் கடுமையான கருத்துகளை மஹிந்த தற்போது வெளிப்படுத்தாமல் இருப்பது சர்வதேசத்திடம் இருந்து தப்பிக் கொள்வதற்காகவே என்றும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment