August 26, 2016

லண்டனில் ஒரு குடும்பத்தில் இரு ஈழத் தமிழரை பலி எடுத்த காலன்!!! கண்ணீரில் குடும்பம்…!

இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்று (புதன்கிழமை), 5 சடலங்கள் கண்டடெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


பலியானவர்களில் இருவரின் சடலங்கள் ஏற்கனவே மீட்க்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த மேலும் மூன்று பேரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது .ஹெலிஹாப்டர்கள் மூலம் தேடுதல் பணியை மேற்கொண்ட போலீசார் காணாமல் போயிருந்த இளைஞர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றது .

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் உள்ளிட்ட 5பேரே பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

சகோதரர்களான சத்தியநாதன் கோபிகாந்த்,சத்தியநாதன் கேனுஜன் மற்றும் ஸ்ரீஸ்காந்தராசா இந்துசன்,நிதர்சன் குரு ஆகிய ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களே பலியாகியுள்ளனர்.அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கடலில் மூழ்கி காணாமல் போன மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரத்தின் பின்னர், மேலுமிரு சடலங்கள் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.

அத்தோடு, மேலுமொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹெலிக்கொப்டரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பிராந்தியப் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரையில், இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சென்ற கிழமையும் இலங்கைத்தமிழர் ஒருவர் கடலில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற ஆபத்தான கடல்கரைகளில் , மக்கள் குளிப்பதை உடனே தவிர்க்குமாறு பொலிசார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
















No comments:

Post a Comment