வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும், காணாமல் ஆக்கப்பட்ட அல்லது காணாமல்போன உறவுகளின் நிலைப்பாட்டை அறிந்தும் கொள்ளும் வகையிலான பேராளர் மாநாடு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபையின் அனுசரணையில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டிற்கு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமை தாங்கவுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை, அவர்களது பிரச்சினைக்கான தீர்வு மற்றும் சர்வதேசத்திற்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தத்தை பிரயோகித்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டே குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் காணாமல் போனவர்களது உறவினர்கள், சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள், வெளிநாட்டு தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment