September 1, 2016

மஹிந்தவுக்கு ஆதரவாக ஐ.நா அலுவலகத்தில் ; நாலக்க தேரர் மனு கையளிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக ஐ.நா அலுவலகத்தில் பெங்கமுவே நாலக தேரரினால் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.


கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இன்று (01) குறித்த மனுவை தேரர் கையளித்துள்ளார்.

இதன்போது பெங்கமுவே நாலக்க தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸ இலங்கையில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தவர். அது மட்டுமல்ல நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியவரும் இவர் தான் என கூறினார்.

எனவே மஹிந்தவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் பெங்கமுவே நாலக்க தேரர் கேட்டுக்கொண்டார்.

மேலும், நாலக்க தேரர் தலைமையில் தேசிய உரிமை அமைப்பு என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித உரிமை அமைப்பைவிடவும் சிறந்தது எனவும் இவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து இராவண பலய அமைப்பு ஒரு மோசமான ஆர்ப்பாட்டத்தை இன்று காலை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment