தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் சார்ந்த அனைத்து விடயங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேல் சுமத்தப்பட்டுள்ளது.
விரும்பியோ, விரும்பாமலோ அந்த சுமைகளை சுமக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக பலம்பெற்றிருந்த காலப்பகுதியில் தமது அரசியல் நோக்கிய ஒரு நகர்வுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கிய போதும் ஆயுதப்போராட்டத்திற்கு சமாந்தரமாக அதனை நகர்த்தியிருக்கவில்லை.
அதனால் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற ஒரு காரணத்தை மையாக கொண்டு கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆதரவு கிடைத்திருந்ததுடன் அது மக்கள் இயக்கமாக கட்டியெழுப்பப்படவில்லை. 2009 மே மாதம் ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு கட்டமைப்பை அதில் இந்த பங்கிகாளிக்கட்சிகள் உருவாக்கியிருக்கவில்லை.
ஆயுத வழிப் போராட்டத்தில் இருந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய தலைவர்கள் தமக்குள் விட்டுக் கொடுப்பை செய்ய முடியாமல் மிதவாத தலமைகளிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தொடர்ந்தும் ஒப்படைத்திருந்தனர். 2010 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய அரசியலில் தமிழரசுக் கட்சியின் பலம் என்பது கேள்விக்குட்படுத்தக் கூடியதொன்றாகவே இருந்தது. அதனை பயன்படுத்தி ஒரு கட்மைப்பு சார் அரசியல் இயக்கமாக கூட்டமைப்பை அதன் ஆயுவழி வந்து பங்காளிகள் காத்திரமாக உருவாக்க தவறியிருந்தனர். அதன் விளைவே கூட்டமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று பங்ளிகாக்கட்சிகள் தற்போது நேரத்தை செலவு செய்து கூச்சலிட வேண்டிய தேவையை உருவாக்கியிருந்தது.
தமிழரசுக் கட்சி என்பது தமிழ் தேசிய அரசியலில் மிதவாத போக்குடைய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு கட்சியாக இருந்தாலும் 1961 ஆம் ஆண்டு மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட பாரிய சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பின்னார் மக்களை ஒன்றுபடுத்திய பாரிய போராட்டங்களை செய்திருக்கவில்லை. கடந்த 30 வருடமாக பாராளுமன்றத்திலேயே அதன் குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது.
இவ்வாறான தமிழரசுக் கட்சியிடம் தமக்குள் சரியான புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்பும் இல்லாமையால் ஆயுதவழியில் இருந்து ஜனநாயகத்திற்கு திரும்பியவர்கள் தலைமைப் பொறுப்புக்களை மிதவாத தலைவர்களாக தம்மை அடையாளம் காட்டிக் கொண்ட தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்து விட்டு அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்கள். இந்த நிலையில் கூட்டமைப்பின் சின்னமாகவும், கட்சியாகவும் தமிழரசுக் கட்சியையும், அதன் சின்னமான வீட்டினையும் முதன்மைப்படுத்தி தேர்தல்களில் போட்டியிட்டனர். அதனால் மிதவாத தலைவர்கள் தமிழரசுக் கட்சி தான் தாய் கட்சி என தமக்குள் கூறிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இன்று அத்தலைமையில் கீழ் இருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது மக்களை முன்னகர்த்தி மக்கள் இயக்கமாக மாற்றமடைவதற்கு பதிலாக மக்கள் குரலுக்கு ஆதரவு தெரிவுக்கு ஒரு அமைப்பாக மாறியிருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலஅபகரிப்பு தொடக்கம் காணாமல் போனோர் பிரச்சனை வரை தமிழ் மக்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் தமிழ் தேசியக் கூட்மைப்பு அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு அமைப்பாகவே தன்னை மாற்றியுள்ளது. உண்மையில் அந்த போராட்டத்தை மக்களை ஒன்றுபடுத்தி செய்யவேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே.
ஆனால் அது அந்த தார்மீக கடமையில் இருந்து விலகியிருக்கின்றது. புலிகள் இருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைபபை இயக்க பலமான ஒரு சக்தி புலிகள் தரப்பில் இருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் ஆயுத பலம் இன்று இல்லாத நிலையில் பலம், அரசியல் நகர்வு இரண்டையும் ஒன்று சேர்ந்து நகர்த்தக் கூடிய வல்லமை இந்த தலைமைகளிடம் இல்லாமல் போயுள்ளது. இதனால் தான் சர்வதேசத்தை நம்ப வேண்டிய ஒரு சூழ்நிலையை அது உருவாக்கியுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல்வேறு நாடுகளில் இருந்து இராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் இலங்கை வந்து செல்லத் தொடங்கினர். அதன் ஒரு கட்டமாக அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப் தலமையிலான குழுவினர் வருகை தந்திருந்ததுடன் கடந்த 15 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்திருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், அமெரிக்கா தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பங்காற்றிவருகின்றது.
2012ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஒத்ததான தீர்வினை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும், காணாமல் போனவர்கள் விடயம், மீள்குடியேற்ற விடயம், மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் போன்றவற்றிலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டு விடயத்திலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பு எமக்கு தொடர்ச்சியாக வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல்பலம் மக்களின் பலம் என்பவற்றைக் கொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்காது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகள் எல்லாவற்றையும் கேட்டு அவற்றை மூட்டையாக காட்டி அமெரிக்க, இந்தியா உள்ளிட்ட சர்வதே தேசத்திடம் சுமந்தியுள்ளது. அதன்விளைவாக கூட்டமைப்பு இன்று காத்திருப்பு அரசியலை செய்து வருகின்றது. இலங்கை பாராளுமன்றத்தில் பலத்துடனும், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனை தீர்க்க வேண்டிய கடமையிலும் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு அழுத்தங்களை கொடுக்காது மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தாது சர்வதேசத்தின் தலையில் அதனை சுமந்தியுள்ளமை இயலாமையின் வெளிப்பாடு என்று தெரிகிறது.
சர்வதேச பங்களிப்பு தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக சர்வதேசம் எல்லாவற்றையும் பார்துத்க் கொள்ளும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. ஏன்எனில் கடந்தகால படிப்பினைகள் அதனையும் எமக்கு காட்டியுள்ளன. புலிகள் பலமிக்க ஒரு ஆயுதக்கட்டமைப்பாக இருந்த போது தமது பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தலாக புலிகள் வருவதை அவதானித்த சர்வதேச சமூகம் அவர்களக்கும், அரசிற்கும் இடையிலான சமாதான பேச்சுக்களில் தலையிட்டு இறுதி யுத்தம் வரை புலிகளை சர்வதேசத்தை நம்பிய ஒரு காத்திருப்பு நிலைக்கு கொண்டு சென்றது. அதன் விளைவே முள்ளியவாய்க்கால் அவலம். சர்வதேசத்ததை நம்பியதால் முள்ளியவாய்கால் வரை தமிழினம் செல்லவேண்டியிருந்தது.
தற்போது அந்த ஆயுத பலம் மௌனித்த பின்னர் மீண்டும் சர்வதேசத்தை நம்பிய ஒரு அரசியல் நகர்வு என்பது தமிழினத்தை எங்கு கொண்டு செல்லப் போகின்றது என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. எமக்கான தீர்வு மற்றும் எமது உரிமைகளை பெறுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் சர்வதேசத்தை எமது பக்கம் திருப்புவதை விடுத்து சர்வதேசத்திடம் பொறுப்புக்களை ஒப்படைந்துவிட்டு நாம் வேடிக்கை பார்ப்பதென்பது அரசியல் ஞான சூனியத்தன்மையையே வெளிப்படுத்துகிறது. சர்வதேசம் சார்ந்த அரசாங்கங்களும் இலங்கை அரசாங்கமும் இணைந்து கொடுப்பதை வாங்க வேண்டிய ஒரு சூழலையே அது உருவாக்கும். அவ்வாறான ஒரு நிலமையைத் தான் தமிழ் தலைமை விரும்புமாக இருந்தால் முள்ளியவாய்கால் வரை நாம் சென்றிருக்க தேவையில்லை.
இந்த நிலையில் அமெரிக்கா உயர்ஸ்தானிகருக்கான சந்திப்பு தொடர்பில் வடமாகாண அவைத்தலைவர் சி.விகே.சிவஞானம் அமெரிக்காவினுடைய நிலைப்பாடுகள் கூட சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், அந்த சந்திப்பில் திருப்தி இல்லை எனவும் கூறியிருக்கின்றார். மறுபுறம் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசிகள் போடப்பட்டதா என்பது தொடர்பில் அமெரிக்க மருத்துவ குழுவின் துணையடன் பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக முதலர்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதனை அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனராதன்ன மறுத்து, இலங்கையில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதால் சர்வதேச மருத்துவர்கள் தேவையில்லை என அவர் கூறியுள்ளார். இந்த இடத்தில் அமெரிக்கா தொடபில் இருவேறுபட்ட தன்மைகளை தமிழர் தரப்பு கொண்டுள்ளதையே அது கோடிட்டு காட்டியுள்ளன.
இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னர் 1946 ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சி உருவாகியது. அது தேசிய இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை உருவாக்குதற்காகவே உருவாகியது. ஆக சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் தேசிய இனங்களுக்கிடையில் பிரச்சனைகள் இருந்திருக்கின்றன என்பதையே ஐக்கிய தேசியக் கட்சியின் தோற்றம் வெளிப்படுத்தியிருக்கின்றது. சுதந்திரத்தின் பின்னர் 1952 இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியது.
சிறிலங்கா என சிங்கள மக்களை முதன்மைப்படுத்தி சுதந்திரக் கட்சி உருவாகியது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் யாருக்கு சுதந்திரம் வழங்க இந்தக் கட்சி உருவாகியது என்ற கேள்வியை பார்த்தால், ஐக்கிய தேசியக்கட்சியிடம் இருந்து அதாவது இனங்களின் ஐக்கியத்தில் இருந்து சிங்கள மக்களை பிரிக்கும் முனைப்புடன் அந்தக் கட்சி உருவாகியது என்பது தெளிவாக தெரிகிறது. ஆக அந்தக் கலாத்தில் இருந்தே 60 வருடத்திற்கு மேலாக தமிழ் மக்கள் பிரச்சனகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நகர வேண்டிய தேவை தமிழ் தேசியக் கூட்மைப்பிடமே இருக்கிறது.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து இலங்கை சுதந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு கூட இந்தியாவையே நம்பியிருந்க்தது. மாகாத்மா காந்தி இந்திய சுதந்திர போராட்டத’;திற்காக நிதி உதவிகளைக் கேட்ட போது வடக்கில் இருந்த மிதவாதிகள் அவருக்கு பொன், பொருட்களை வாரிக் கொடுத்து விட்டு உங்களுக்கு சதந்திரம் கிடைத்தால் எமக்கு கிடைத்த மாதிரி எனக் கூறி காத்திருப்பு அரசியலை செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தியாவைத் தொடர்ந்து இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அப்போது இருந்த சர்வதேச அரசியல் வேறு. தற்போதைய சூழல் வேறு. ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து அரசியலை முன்னகர்த்தியிருந்தார்.
இந்து சமுத்திர பிராந்திய நலன்களுக்கு இந்த தொடர்பு அச்சுறுத்தலாக அமைந்தமையால் இந்தியா தமிழர் பிரச்சனையில் தலையிடத் தொடங்கியது. போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சிகளையும், ஆயுதங்களையும் இந்தியா வழங்கியிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாக இந்திய – இலங்கை ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருந்தது. மாறிவந்த சர்வதேச அரசியல் சூழ்நிலைகளால் அந்த ஒப்பந்தம் கூட கிழித்தெறியப்பட்டு முள்ளியவாய்கால் பேரவலம் வரை நாம் சந்திக்க வேண்டியிருந்தது.
ஆக இந்த நாட்டில் சர்வதேசத்தை நம்பிய காத்திருப்பு நகர்வு என்பது இன்று நேற்றல்ல, அது நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. 60 வருட போராட்ட வரலாற்றிலும் சர்வதேச தலையீடுகள், அவர்கள் மீதான காத்திருப்புக்கள் இருக்கின்றது. அவ்வாறான ஒரு நிலையில் அவர்களால் இதுவரை எதையும் பெற்றுத் தரமுடியவில்லை. தமிழர் தரப்பு ஒரு கறிவேப்பிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்தநிலையில், யாருக்கு பசிக்கின்றதோ அவர் தான் சாப்பிட முடியும். வேறு ஒருவரை சாப்பிட வைக்க முடியாது. அதுபோல் தமிழர் தரப்பு தமக்கான பிரச்சனையை தீர்க்க தாமே ஆர்வம் காட்டி முனைப்புடன் செயற்பட வேண்டும். இன்னொரு நாட்டினுடைய தலையில் அவற்றை சுமத்திவிட்டு காத்திருப்பு அரசியலை செய்வது என்பது ஒரு போதும், நிரந்தரமான தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதான நியாயபூர்வமான தீர்வை தரப்போவதில்லை.
இதனை தற்போதைய தமிழ் தலைமைகள் புரிந்து செயற்படாதவரை அவர்களுடைய தாயகம், தேசியம், சுயநிர்ணம் என்ற கோசங்களும் அவர்களது மேடைப்பேச்சுக்களும் வெறும் தேர்தலுக்கான வார்த்தைகளாக இருக்கப்போகின்றது. ஒரு கிறடிக் காட்டில் இருந்து தினமும் பணத்தை பெற முடியாது. அதில் பணம் முடிந்த பின்பு அதனைப் பயன்படுத்த முடியாது. அந்த நிலை தான் தற்போதைய தமிழ் அரசியல் சூழலில் இருக்கிறது. இதனை உணர்ந்து மக்கள் இயக்கமாக தமிழ் தேசிய அரசியல் கட்டியெழுப்பப்படாது, காத்திருப்பு அரசியலை செய்வது என்பது தரகு அரசியல் போன்றதான ஒரு ஏமாற்றத்தையே கொடுக்கும்.

No comments:
Post a Comment