யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதி க்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
தென்மராட்சியை சேர்ந்த 37 வயதான இராசையா ஆனந்தராஜா என்பவரே யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் 2012ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் மீண்டும் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் கடந்த ஜூன் 5ஆம் திகதி தனது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தடுப்பூசியொன்று ஏற்றப்பட்டிருந்ததாகவும் இதனால் இவருக்கு உடல் உள பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து குறித்த கைதியை அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பணிப்புரை விடுத்திருந்தார்.
அந்தவகையில் கடந்த 14ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குறித்த கைதிக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற குறித்த கைதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment