July 8, 2016

பௌத்தர்களைத் துன்புறுத்தும் முஸ்லிம்கள்! - கொதிக்கிறார் ஞானசார தேரர் !

முஸ்லிம் சமூகத்தினால் பௌத்தர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் பற்றி யார் பேசுவது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், நாட்டை ஆட்சி செய்வோருக்கு இது பற்றி எவ்வித கவலையும் இல்லையா? நாட்டில் வீதிகளை அமைப்பதற்கு மட்டும் அரசாங்கங்கள் இல்லை. எமது தலைவர்கள் வெளிநாடுகளை திருப்திப்படுத்த செயற்பட்டால் பௌத்தர்களுக்கு நன்மை ஏற்படாது.

 
சில வஹாப்வாத இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணுகின்றார்கள் என நாம் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே எச்சரித்தோம். ஆட்சியாளர்கள் இதனை இல்லை என்றார்கள். ஞானசார நோர்வே பணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்வாறு பொய்யுரைக்கின்றார் என குற்றம் சுமத்தினர். எனினும் இன்று உண்மை அம்பலமாகியுள்ளது.

இஸ்லாம் மதம் பற்றி டியூசன் சொல்லிக் கொடுக்க நாம் தயார். வீடு வீடாகச் சென்று முஸ்லிம் அமைப்புக்களை தோற்கடிக்க நாம் தயார். பௌத்த மத போதனைகள் செய்யவும் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment