போரின் போது இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அரச படையினரை பலி கொடுக்க சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
மொறட்டுவை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
”புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதம் ஓரங்கட்டப்படலாம் என்ற அச்சம் எம்மத்தியில் எழுந்துள்ளது. இந்த அச்சம் அனைத்து பௌத்த மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. இந்த நிலைமையை புரிந்துகொண்டு அவ்வாறான நிலமை எற்படுவதைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என்று நாம் நம்புகின்றோம்.
அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் அனைவரும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கம் வார்த்தை ஜாலங்களைக் கொண்டு நாட்டை துண்டாடும் சதியில் ஈடுபட்டுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அது மாத்திரமன்றி யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படையினரை பலிவாங்கும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்காகவே போர் குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தத்திற்கு அமைய சர்வதேச விசாரணைகளையும் நடத்த தற்போதைய அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருக்கின்றது.

No comments:
Post a Comment