August 21, 2015

யாழ்.மாவட்ட மீனவ சங்ககளின் சம்மேளனம் இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் வேண்டுகோள் !

இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பினில் புதிய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்கவேண்டுமென யாழ்.மாவட்ட மீனவ சங்ககளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


அதன் தலைவர் எமிலியாம்பிள்ளை இன்று யாழ்.ஊடக அமையத்தினி;ல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் பேசுகையினில் தற்போதைய பிரதமர் முன்னர் உறுதி மொழிவழங்கியவாறாக இந்திய மீன்வர்களினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்ட அவர் தவறுமிடத்து உள்ளுர் மீனவர்களே மீண்டும் அத்துமீறிப்பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை சிறைபிடிக்கும் நடவடிக்கைகளினில் ஈடுபடுவதனை ஊக்குவிக்க வேண்டாமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக பிடிக்கப்படும்  இந்திய மீனவர்களை விடுவிப்பதுடன் அவர்களது படகுகள் மற்றும் உபகரணங்களும் விடுவிக்கப்படுகின்றது.அவ்வாறில்லாமல் அவர்களது படகுகள் மற்றும் உபகரணங்களிற்கு உரிய தண்டம் அறவிடுவதன் மூலம் எதிர்காலத்தினில் அவ்வாறான முயற்சிகளை தடுத்து நிறுத்த முடியுமென நம்பிக்கை வெளியிட்ட அவர் ஆனால் கைது செய்யப்படும் மீன்வர்களினில் கணிசமானவர்கள் வெறும் கூலிகளே எனவும் உரிமையாளர்கள் இந்தியாவினில் தங்கியிருந்துவிடுவதாகவும் தெரிவித்தார்.

அதே வேளை சீன மீனவர்களது படகுகள் அத்துமீறி மீறி மீன்பிடியினில் ஈடுபடுவது தற்போது இல்லையெனவும் அவர் ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment